திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டிய பட்டணம், சண்முகபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் மாசானி திரவியம் (29). இவர் சென்னையில் உள்ள ஒரு அரிசி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் நேற்று திடீரென தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தியில் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.