தூத்துக்குடி:பஞ்சர் ஓட்டும் போது டயர் வெடித்து வாலிபர் பலி!

தூத்துக்குடி மாவட்டம்,குளத்தூர்,வைப்பார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ராஜா கௌதம் (18). மணிகண்டன் நடத்தி வரும் நடமாடும் பஞ்சர் கடையில் அவர்க்கு உதவியாக ராஜா கௌதம் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வைப்பார் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கும் முன்பு பஞ்சராகி நின்ற லாரியை தந்தையும்- மகனும் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி டயர் வெடித்தில் ராஜா கௌதம் பலத்த காயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற ✅தூத்துக்குடி டைம்ஸ்✅வாட்ஸ் அப் செய்தி சேவையில் இணைந்திருங்கள்;
✅ தூத்துக்குடி டைம்ஸ் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46