தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பலி

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகரைச் சேர்ந்த குறிஞ்சிநாதன் மகன் ஸ்ரீகுமார் (43). இவர் தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோட்டில மீன்வளக் கல்லூரி அருகே பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.