தூத்துக்குடி:விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில், உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் பொன்பாண்டி ஆகியோர் நேற்று (02.01.2024) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி நேதாஜி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் ஜெயகண்ணன் (22) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஜெயகண்ணனை கைது செய்து அவரிடமிருந்த 700 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.