தூத்துக்குடியில் நண்பரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் பழனி குமார் மகன் சஞ்சய் (18),இவரும் போல்டன் புரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் மகன் ஜோஸ்வா டேனியல் (19) ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே பண விவாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜோஸ்வா டேனியல் சங்கராபுரத்தில் உள்ள சஞ்சய் வீட்டின் முன்பு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து வீசியுள்ளார். இதில் பாட்டில் வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோஸ்வா டேனியலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.