அகில இந்திய துணை தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்:ஆட்சியர் கோ.லட்சுமிபதி தகவல்

அகில இந்திய துணை தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (கழச ளுநஅநளவநச ளுலளவநஅ ழடெல) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, துணைத் தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களை 15.02.2024 – தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, இந்நல்வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 மேலும், அகில இந்திய துணைத் தொழிற் தேர்வு மார்ச் 2024, குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற http://skilltraining.tn.gov.in மற்றும் https://ncvtmis.gov.inn ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  தெரிவித்துள்ளார்.
உங்கள் வணிகம் மற்றும் வியாபாரம் தொடர்பான விளம்பரம் மக்களுக்கு சென்றடைய
ph:9655550896 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்...