உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்:இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இன்று கவுகாத்தியில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ்பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியினரும் மோதுகின்றனர். இந்த போட்டி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் பிற்பகல் 2 மணிக்கு மோதுகின்றனர்.