உலகக் கோப்பை தொடர்:வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியீடு!

உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வர்ணனையாளர்களாக இருந்தவர்கள்,உலகக் கோப்பை தொடரில் விளையாடியவர்கள், சாம்பியன் பட்டம் வென்றவர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வர்ணனையாளர்கள் குழு: ரிக்கி பாண்டிங், மோர்கன், வாட்சன், லிசா ஸ்தாலேக்கர், ரமிஸ் ராஜா, ரவி சாஸ்திரி, ஆரோன் ஃபின்ச், சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன், நாசர் ஹுசைன், இயன் ஸ்மித், இயன் பிஷப், வக்கார் யூனிஸ், ஷான் பொல்லாக், அஞ்சும் சோப்ரா, அதர்டன், சைமன் டவுல், எம்புமெலெலோ எம்பாங்வா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தினேஷ் கார்த்திக், சுப்ரமணியம் பத்ரிநாத், அதர் அலி கான், ரஸ்ஸல் அர்னால்ட், ஹர்ஷா போக்லே, காஸ் நைடூ, மார்க் நிக்கோலஸ், நடாலி ஜெர்மானோஸ், மார்க் ஹோவர்ட், இயன் வார்டு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.