உலக எய்ட்ஸ் தினம்; தூத்துக்குடியில் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி, ரெட் ரிப்பன் கிளப் மற்றும் ஏஆர்டி மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரணியை அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ முதல்வர் சிவக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “சுய ஒழுக்கம் இதில் முக்கியமானது. இந்த சமூகத்தில் எய்ட்ஸ் நோய் தொற்று கிருமி பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று கூறினார்.

இந்த பேரணியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மருத்துவத்துறை பேராசிரியர் ராஜவேல் முருகன், உதவி உறைவிட மருத்துவர் கரோலின், ஏஆர்டி மைய மருத்துவர்கள் சூர்யா பிரதீபா, குழந்தைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி மருத்துவமனை வளாகத்தில் இருந்து துவங்கி வஉசி கல்லூரி வரை நடைபெற்றது. மருத்துவமனை ரெட் ரிப்பன் கிளப் மைய அலுவலர் ஹரி, மாணவர்கள், செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர்.