இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பண்டாரம் செட்டி விளையைச் சேர்ந்த ராமசாமி ராமகிருஷ்ணன் மகள் செல்வ பாரதி (வயது 25). பட்டதாரரியான இவர் காயல்பட்டினத்தில் உள்ள கல்லூரி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுகுறித்து தகவல்றிந்தத குலசேகரப்பட்டினம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வபாரதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.