கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயிலை நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்தில் சென்னை – திருநெல்வேலி செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நெல்லையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.,திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினரக்ள் ரயில் மீது மலர் தூவி
உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.