தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

தூத்துக்குடியில் சாலைப் போக்குவரத்து வார விழாவையொட்டி இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் வலியுறுத்தி வாகனப் பேரணி நடந்தது.

மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் எம்பவர் சங்கர் ஆகியோர் இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். மில்லர்புரத்தில் துவங்கிய பேரணி பனிமய மாதா ஆலயம் வரை சென்று நிறைவடைந்தது.

இந்த பேரணியில் மேயர் ஜெகன் பெரியசாமி, டவுண் ஏ.எஸ்.பி.கில்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம், யங் இந்தியன் அமைப்பினர் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி பணியாளர்கள் ஆகியோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் வணிகம் மற்றும் வியாபாரம் தொடர்பான விளம்பரம் மக்களுக்கு சென்றடைய
ph:9655550896 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்...