திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு எச்சரிக்கை.

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில், ஏராளமானோர் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். இந்த நிலையில் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பதிவான காட்சிகளில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உறுதியாகியுள்ளது. இதனால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.