இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் உள்ள செஸ் வீரர் குகேஷ்-க்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் உள்ள செஸ் வீரர் குகேஷ் பாராட்டி, ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,செஸ் போட்டியில் உலகத்தரவரிசையில் 11ஆவது இடத்தையும், இந்திய அளவில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ள செஸ் வீரர் குகேஷ்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதையடுத்து செஸ் வீரர் குகேஷ் அவர்களின் சாதனையை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சத்திற்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.