தூத்துக்குடி மாநகராட்சிக்கு கல்வி சேவையில் இந்திய அளவில் விருது: மேயர் ஜெகன் பெரியசாமி பெற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி கல்வி சேவையில் மத்திய அரசிடம் இருந்து விருது பெற்றது. விருதை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பெற்றுக்கொண்டார்.

இந்தியாவில் உள்ள 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் தூத்துக்குடி மாநகராட்சி கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி அடிப்படையில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. ஆய்வின் அடிப்படையில் இந்திய அளவில் தூத்துக்குடி மாநகராட்சி மூன்றாவது இடம் பிடித்தது. அதற்கான விருது வழங்கும் விழா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. மத்திய நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்திக் சிங் பூரி வழங்கினார்.இந்த விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெற்றுக்கொண்டார். உடன் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் இருந்தார்.