நாளை  (டிச.5) தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

மிக்ஜம் புயல் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் நாளை  (டிச.5) செவ்வாய்கிழமை  கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் நாளை  (டிச.5) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜய ராகவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.