திருச்சி–குஜராத் விரைவு ரயிலில் தீ விபத்து!

திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து குஜராத் ஸ்ரீ கங்கா நகர் வரை செல்லக்கூடிய ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலானது குஜராத் மாநிலத்தின் வல்சத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் பெட்டி தீப்பிடித்தது. தீ விபத்து நேரிட்டதும் பயணிகள் உடனடியாக இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைக்கப்பட்டதும், உடனே வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து குறித்த காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை அதற்கான காரணங்களை கண்டறிய காவல்துறையினரும் ரயில்வே அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.