நாளை (நவம்பர் 4) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

தமிழகத்தில்‌ நாளை காலை 9 முதல்‌ மாலை 5 மணி வரை வாக்காளர்‌ சிறப்பு முகாம்‌ நடைபெறுகிறது. 2024ம்‌ ஆண்டு ஜனவரி முதல்‌ தேதியை தகுதி பெறும்‌ தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும்‌ தங்களுடைய பெயரை வாக்காளர்‌ பட்டியலில்‌ சேர்க்க விண்ணப்பிக்கலாம்‌. அதேபோல்‌, வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ திருத்தம்‌,நீக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.இந்த முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. வங்கி பாஸ்புக்‌, ரேஷன்‌ கார்டு,ஓட்டுனர் உரிமம்,ஆதார்‌ உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். இந்த சிறப்பு முகாம் நாளை மட்டுமின்றி 5, 18, 19 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட உள்ளன.முகாமில் பெறப்படும் விண்ணப்பம் பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் பணிகள் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் டிச.9 வரை நடைபெறும். இதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும்.

Follow the Thoothukudi Times on whatsApp!
https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9