தூத்துக்குடியில் ரூ.4.38 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்;ஒருவர் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்த ரூ.ரூ.4.38 லட்சம் மதிப்பிலான 409 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்
ஆதாம் அலி மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் . மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்,முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (01.02.2024) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள ஒரு மாட்டு தொழுவத்தில் தாளமுத்துநகர் பெரியசெல்வம் நகரை சேர்ந்த ஜோசப்செல்வராஜ் மகன் அந்தோணிமுத்து (52) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்தோணிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்த ரூ.4,38,935 மதிப்புள்ள 409 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.