திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுவாமி சண்முகர் வெள்ளை நிறபட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி,சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான  ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. முதலில் விநாயகர் தேரும், அதன் பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் திருத்தெருள் வீதி உலா வரும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.சுவாமி முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருள
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து,தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையடைந்தது.


திருச்செந்தூர் முருக பெருமானை தரிசிக்க வருகை தரும் பக்தர்களை வரவேற்கிறோம்:சுந்தரி பைனான்ஸ்

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.