தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 3 மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடியில் கடந்த 11.12.2023 அன்று தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லேபர்காலனி to முத்தையாபுரம் சாலையில் பகுதியில் வந்து கொண்டிருந்த தெர்மல்நகர் லேபர்காலனியைச் சேர்ந்த ஜோசப் மகன் ஜெகன்ராஜ் (32) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில், தெர்மல்நகர் லேபர்காலனியைச் சேர்ந்தவர்களான பேச்சிமுத்து மகன் சக்தி (எ) பறவை (எ) இசக்கிசக்தி (27), இருளாண்டி மகன் நவநீதன் (எ) நவநீதகிருஷ்ணன் (30) மற்றும் கூரியாபிள்ளை மகன் செல்வம் (23) ஆகிய 3 பேரையும் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் கைதான 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் 3பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.