தூத்துக்குடியில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உடல்!

தூத்துக்குடியில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் முட்புதரில் மர்மநபர் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகேயுள்ள விவேகானந்தர் நகரில் முட்புதரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விஏஓ ரத்தினராஜ் அளித்த அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த குழந்தையின் தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.