தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி தேரோட்டம்!

தூத்துக்குடிஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசிதிருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.

இதையோட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில்  அம்பாள் எழுந்தருள திருத்தேரோட்டத்தை தமிழக  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, இந்த சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி சிவன் கோவில் அறங்கால குழு தலைவர் கந்தசாமி, ஸ்ரீ வைகுண்டபதி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏ. சி.செந்தில் குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து வைத்தனர். தொடர்ந்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து திருத்தேர் நிலையை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.