தூத்துக்குடி;அனல்மின் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல்மின் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் என்டிபிஎல் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த ஊழியா்கள் நேற்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கச் செயலா் அப்பாதுரை தலைமை வகித்தாா்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடியில் செயல்படும் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் உள்ள ஒப்பந்த ஊழியா்களுக்கு, உரிய ஊதியம், சலுகைகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்., உயா்நீதிமன்றத் தீா்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாதந்தோறும் 7ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும்.
டிஏ, நிலுவைத் தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .இதில் 100-க்கும்நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் பங்கேற்றனா்.

செய்திகள் தொடர்புக்கு: தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்,போராட்டங்கள் மற்றும் பல்வேறு செய்திகள் குறித்து தகவல்களை செய்திகளாக வெளியிட WHATSAPP NUMBER :965555096 தொடர்பு கொள்ளவும்….