தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்,ஸ்டெம் பூங்கா நாளை திறப்பு.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் ரூ. 57 கோடி மதிப்பில் புதியதாக கட்டடப்பட்டுள்து.இந்த பேருந்து நிலையத்தில் ஒரு நேரத்தில் 30 க்கு மேற்பட்ட பேருந்துகள் நின்று செல்லக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது.

இதே போல் தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் 29 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் புதியதாக பிரம்மாண்டமாக ஸ்டெம் பார்க் கட்டப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு நாளை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.