தூத்துக்குடி மாநகராட்சி 16,17,18 வது வார்டில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி 16,17,18 வது வார்டுக்குட்பட்ட பி அன் டி காலனி, கதிர்வேல்நகர், பால்பாண்டி நகர், அன்னை தெரசாநகர், முத்துகிருஷ்ணாநகர், ஹரிராம்நகர், ஆகிய பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேவையான சாலை பணிகளை மற்றும் கழிவுநீர் வடிகால் கால்வாய் சீரமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளிடம் தேவையான சாலை பணி மற்றும் கழிவுநீர் வடிகால் கால்வாய் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்முருகன், பாஸ்கர், மற்றும் மணி உள்பட பலர் உடனிருந்தனர்.

—விளம்பரம்—