தூத்துக்குடி:வெள்ள நிவாரண தொகை கனிமொழி எம்பி வழங்கல்

தூத்துக்குடி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் நிதி வழங்கும் பணியினை கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்.

தூத்துக்குடி,நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 6 ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி தமிழ்நாடு அரசு அறிவித்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் நிதி வழங்கும் பணிகளை இன்று தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி பள்ளியில் கனிமொழி எம்பி., துவங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.