தூத்துக்குடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் மாவட்டக் கழக செயலாளருமான கீதாஜீவன் இன்று வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் நம்பி, வணக்கத்திற்குரிய மேயர் ஜெகன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த்சேகரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் பாலகுருசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.