கழுகுமலை கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி, கழுகுமலை கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றிற்கு 18 வகையான மூலிகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் கோயில் நிா்வாக அலுவலா் காா்த்தீஸ்வரன் மற்றும் கோயில் பணியாளா்கள், உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.