ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசைத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தை அமாவாசை திருவிழாஇம்மாதம் கடந்த சில நாட்களுக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் வரை தினமும் சுவாமிக்கு அலங்கார, தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகளும், காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும்நிகழ்ச்சியும் நடைபெற்றன. பத்தாம் திருவிழாவான நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டுமதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி நடைபெற்றது. பின்னா் உருகு பலகையில் சுவாமிக்கு பால், சந்தனம், திரவியம், விபூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடாா் நடத்தி வைத்தாா்.

மாலை 5 மணிக்கு இலாமிச்ச வோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனியும், இரவு 10 மணிக்கு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெற்றது.திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராடி வழிபட்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் செய்திருந்தார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…