தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் திருட்டு

தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வழக்கம் போல் நேற்று இரவு 10 மணி அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றுள்ளனர்.


இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த ரூ.1லட்சம் பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து டாஸ்மாக் சூப்பர்வைசர் சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.