தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணி:அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 25.02.2024 அன்று தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் தொழில்பூங்காவில் வின் பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.மேலும், புதுக்கோட்டை சூசைபாண்டியபுரம் மங்களகிரி விலக்கு அருகே நலதிட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

இதனை முன்னிட்டு விழா மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்தசேகரன், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், திமுக நிர்வாகிகள் உமரி சங்கர், கே.பி. ராஜா ஸ்டாலின், வழக்கறிஞர் செல்வகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.