புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா இன்று நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலத்தில் ஆண்டுதோறும் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை ஆண்டுப் பெருவிழா நடைபெறும்.இந்தாண்டு இப்பெருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை மற்றும் மாலையில் திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை திருத்தலப் பெருவிழா திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆண்டு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. முன்னதாக திருவிழாவை முன்னிட்டு காலை புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக உப்புயை தூவியும், கும்பிடு சரணம் போட்டு இறைமக்கள் தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அப்போது பலர் குழந்தைகளை விற்று வாங்கினார்கள். ஆலய விழாவில் 100-க்கும் மேற்பட்ட பங்கு தந்தைகள் கலந்து கொண்டனர்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மோட்சராஜன், உதவி பங்கு தந்தை சந்தியாகு, சகாயதாசன், ஆன்மீகத்தந்தை பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருள்சகோதரிகள், ஆலய இறைமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

உங்கள் விளம்பரம் மக்களிடம் சென்றடைய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9655550896