தூத்துக்குடி:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சான்றிதழ்கள்,ஆவணங்கள் பெற சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சான்றிதழ்கள்,ஆவணங்கள் பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் 17.12.2023 அன்று பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவாய்த் துறை மற்றும் இதர அரசு துறைகளினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் குடும்ப அட்டை வாகன ஒட்டுநர் உரிமம், வாக்களர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இழந்தவர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் திங்கள் கிழமை தோறும் வட்ட அளவில் நடத்தப்படும்.

இம்முகாம்களில் பொதுமக்களின் வசதிக்கென இசேவை மையங்கள் செயல்படும். பொதுமக்கள் இச்சேவைகளை கட்டணமின்றி பெற்றுக் கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.