நாளை (டிச-9)ம் தேதி ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 9ம் தேதி சனிக்கிழமை பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் திருத்தம் மற்றும் புதிய ரேசன் அட்டை பெறுதல் ஆகியவற்றிக்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்காக சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை சனிக்கிழமை (டிச. 9) காலை 10 முதல் நண்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது. இதில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல் உள்ளிட்ட குறைகள், கோரிக்கைகள் சரிசெய்யப்படும்.மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்ற வேண்டியிருந்தால் முகாமிலேயே பதிவேற்றப்படும். எனவே, பொதுமக்கள் இம்முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

• செய்திகளை தெரிந்து கொள்ள தூத்துக்குடி டைம்ஸ் வாட்ஸ்அப் குழு!
https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9