ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சி: எஸ்பி.,நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி உட்கோட்டம், தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சி, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய மைதானத்தில் வைத்து இன்று (14.10.2023) காலை நடைபெற்றது. காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடற்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து காவல்துறையினரும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்   ராஜாராம், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  அய்யப்பன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  மாரியம்மாள் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.