திருச்செந்தூர் காவல் நிலையங்களில் எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேற்று (31.01.2024) திருச்செந்தூர் தாலுகா மற்றும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கெளரி மனோகரி உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

உங்கள் விளம்பரம் மக்களிடம் சென்றடைய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9655550896