சாத்தான்குளம் துணை கண்காணிப்பாளர் அலுவகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு!

சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சாத்தான்குளம் உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், நாசரேத், தட்டார்மடம் மற்றும் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து சாத்தான்குளம் உட்கோட்ட காவல் அலுவலக போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கி, உட்கோட்ட அலுவலக வளாகம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

இந்த ஆய்வின்போது சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள், தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் திருநாவுக்கரசு, சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.