வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்: காவல் துறையின் பாதுகாப்பு பணி-எஸ்பி.,பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு ஆறுமுகநேரி, மூலக்கரை மற்றும் அம்மன்புரம் ஆகிய பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இன்று (26.09.2023) வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு 5 காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 62 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆறுமுகநேரி, மூலக்கரை மற்றும் அம்மன்புரம் ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.