தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் கவாத்து இறுதித் தேர்வு: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு!

தூத்துக்குடி பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான கவாத்து இறுதித் தேர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 519 காவலர்களுக்கு இறுதி கவாத்து தேர்வு (Final Parade Test) நேற்று (15.12.2023) நடைபெற்றது. மேற்படி கவாத்து தேர்வை காவலர் பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின்போது காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், காவலர் பயிற்சி பள்ளி முதன்மை கவாத்து போதகர் சரவணகுமார், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.