தூத்துக்குடியில் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

தூத்துக்குடியில் மதுபோதையில் தாயிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த கோபி மகன் அரவிந்த் (20) என்பவர் நேற்று (16.12.2023) தனது தாயிடம் மதுபோதையில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து அரவிந்தின் தாயார் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினவேல் வழக்குபதிந்து அரவிந்தை கைது செய்தார்.