தூத்துக்குடி: ராணுவ வீரர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம்,வெம்பூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் வேதமுத்து மகன் வேல்முருகன் (24). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார். இவருக்கும் வெம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த ஆயிரம் கண்ணுடையான் மகன் மாரிச்சாமி (30) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டுக்குள் புகுந்த வேல்முருகன் மாரிச்சாமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வேல்முருகன் உடலை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே எட்டயபுரம் காவல் நிலையத்தில் ராணுவ வீரர் வேல் முருகனின் குடும்பத்தினர் மற்றும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் உதவிகள் கிடைக்க ஆவண செய்யப்படும் என தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ராணுவ வீரர் வேல்முருகனின் குடும்பத்தினர் அவரது சடலத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை முடிவடைந்து வெம்பூரில் இரவில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ், சுபேதார் வரதராஜன், ஹவில்தார் சுரேஷ் ஆகியோர் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.