“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம், ஆத்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று (14.12.2023) சாத்தான்குளம் அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி தலைமையிலான போலீசார் தட்டார்மடம் தாமரைமொழி பகுதியில் பொதுமக்களிடமும், ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னக்காயல் பகுதியில் பொதுமக்களிடமும், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீசார் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடன்குடி TDTA மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடமும், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர்   ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்  அருள் மோசஸ் மற்றும் போலீசார் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கன்தட்டு கிராம பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுவரை 3788 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,19,416 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.