தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழா!

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழா கொண்டப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி வ.ஊ.சி மார்க்கெட் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் உருவப் படத்திற்குமாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை கலந்து கொண்டார்.
மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகரத் தொண்டர் அணி செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.