பவதாரிணி உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி..!

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் பவதாரிணி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இந் நிலையில் மறைந்த பாடகி பவதாரிணி உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பவதாரிணியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், நடிகர் சிவகுமார், பாடகர் மனோ, பிரேம்ஜி, மனோஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று
அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…