தமிழக சட்டப் பேரவை காவிரி விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் நிறைவேற்றம்.!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (09.10.2023) காலை 10 மணிக்கு துவங்கியது. இதில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து தனித் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. தனித்தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் காவிரி விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தின் மீது திமுக, அதிமுக, பாமக என கட்சி பேதமின்றி பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் அரசு நிறைவேற்றும் தனித்தீர்மானத்தில் உள்ள சில வரிகளுக்கு பாஜக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.