தூத்துக்குடியில் மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு: நவ.26-ம் தேதி நடக்கிறது!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2023-24-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ். ராஜன் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டிக்கான, தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்க்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வு வருகிற 26-ம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அழகர் பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.09.1993 அன்றோ, அதற்கு பின்னரோ, 31.08.2010 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்திருக்க வேண்டும். கலந்து கொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் தங்களின் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (100kb க்குள்) ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் (பி.டி.எப்) ஆகிய மூன்றையும் டிஜிட்டல் முறையில் கட்டாயம் கொண்டு வர வேண்டும். வீரர்கள் கிரிக்கெட் உடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அணிந்து தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளரை 80156 21154 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் வி.ஆர்.சிவகுமரன் தெரிவித்து உள்ளார்.