தூத்துக்குடியில் எஸ்டிபிஐ.,கட்சியின் தோ்தல் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாநகர பகுதி எஸ்டிபிஐ கட்சியின் 2024 பாராளுமன்ற தோ்தல் ஆலோசனை கூட்டம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளா் மின்னல் அம்ஜத் தலைமை தாங்கினாா். தொகுதி தலைவா் காதர் உசேன் வரவேற்புரை ஆற்றினாா். மாவட்ட பொருளாளர் அஸ்ரப் அலி பைஜி சிறப்புரை ஆற்றினாா்.

இந்த கூட்டத்தில் மாநில மீனவர் அணி துணை ஒருங்கினைப்பாளர் கெளது மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் காதர் முகைதீன், மைதீன் கனி, ஷேக் முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி செயலாளர் ரியாஸ் நன்றியுரை ஆற்றினாா்.