எஸ்.ஐ.,தேர்வில் தோல்வி: சாத்தான்குளம் காவலர் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்தவர், சிவகாசியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் பால்பாண்டி (30). இவருககு மனைவி ஜெயஸ்ரீ மற்றும் மகன் மித்ரன் (2) உள்ளனர்.பால்பாண்டிககு நீண்டகால உதவி ஆய்வாளராக வேண்டும் என ஆசை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த மாதம் 26ம் தேதி பால்பாண்டி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிககப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.