மின்தடை தேதியை மாற்ற வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை மனு

தூத்துக்குடியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி மின்தடை தேதியை மாற்ற வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி சார்பில் செயலாளர் சிவசு. முத்துக்குமார் தலைமையில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் முன்னிலையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர் புறம் செயல் பொறியாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வரும் 21.10.2023 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 23.10.2023 தேதியில் ஆயுத பூஜை விஜயதசமி மற்றும் தசரா விழா கொண்டாடப்படுகிறது.இக்காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தசரா விரதம் கடைபிடித்து வீடுகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் மின் நிறுத்தத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். மேலும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பொதுமக்கள் விடுமுறை தினமான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பொருட்கள் வாங்க குடும்பத்துடன் பஜாரில் கூடுவார்கள். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், சிறு தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளவர்கள்.

எனவே பொதுமக்கள் வியாபாரிகள் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு பிறகு வேறு தேதியில் மாதாந்திர மின் தடை மாற்றி வைக்கும்படி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் வர்த்தக அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் மாவட்ட பிரதிநிதி பெரியசாமி மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாநகரச் செயலாளர் உதயசூரியன் வழக்கறிஞர் சகாயராஜ் மற்றும் செல்வராஜ், சண்முககுமார் ஆகியோர் உடன் சென்றனர்.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற ✅தூத்துக்குடி டைம்ஸ்✅வாட்ஸ் அப் செய்தி சேவையில் இணைந்திருங்கள்;

தூத்துக்குடி டைம்ஸ் channel on WhatsApp:  https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46